வவுனியாவில் மனித எச்சம் மீட்பு! (படங்கள்)

வவுனியா சமணங்குளம் சுடுகாட்டிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள் இன்று (12.08.2018) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது!!

வவுனியா சமணங்குளம் சுடுகாட்டில் உடல் ஒன்றை தகனம் செய்யச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது

சடலத்தின் எச்சங்கள் காணப்பட்ட இடத்திலுள்ள மரம் ஒன்றில் கயிறு கட்டப்பட்டுள்ளதுடன் சடலம் பல நாள் சென்றுள்ள நிலையில் மண்டையோடு மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர் என சந்தேகிக்கப்படுபவரின் ஆடைகள், பாதணி மற்றும் சில ஆவணங்களும் பொலிசாரினால் மீட்கப்ட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆவணத்தில் பி.முத்தையா உப்புக்குளம் வயது 60 என்ற தகவலுடன் வைத்தியசாலை மருந்து பற்றுச்சீட்டு ஒன்றும் மீட்கப்ட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா சிதம்பரபுரம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like