வவுனியாவில் முச்சக்கரவண்டியில் கஞ்சாவுடன் சென்ற நபர் தப்பி ஓட்டம் : சாரதி கைது!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் ஞாயிறு இரவு பொலிசாரின் சோதனை நடவடிக்கையின்போது முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப் பொருளைக்கொண்டு சென்ற நபர் ஒருவர் போதைப் பொருளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்த பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது இருவரையும் சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் கள்ளிக்குளத்திலிருந்து நபர் ஒருவருடன் வவுனியாவிற்கு வாடகைக்கு முச்சக்கரவண்டி ஒன்று சென்றபோது நொச்சிமோட்டை பாலத்தில் பொலிசாரின் வழமையான சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியைச் சோதனைக்குட்படுத்திய பொலிசார் அதில் பயணித்த நபர் ஒருவர் இறங்கி வெளியே காத்திருந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியுடன் சோதனை மேற்கொண்ட பொலிசார் மறைத்து அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்ட பொதி செய்யப்பட்ட சிறிய கஞ்சாப் பொட்டலங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியில் சென்று இறங்கி வெளியே காத்திருந்த நபர் போதைப் பொருட்களைப் பொலிசார் கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த பொலிசார் குறித்த நபரை விரட்டிச் சென்றபோதும் அவர் தப்பி ஓடிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து வாடகைக்கு சென்ற முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்த பொலிசார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று குறித்த நபர் மீது விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் நேற்று பிற்பகல் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

10 ஆயிரம் பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன் எதிர்வரும் (18.09.2018) அன்றையதினத்திற்கு வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.