அகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண்! 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம்

தமிழகம், மண்டபம் அகதிகள் முகாமில் பெண் அகதி ஒருவர் தொடர்ந்து 50 நாட்களாக பட்டினியாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அகதிகள் முகாமிற்கு விஜயம் மேற்கொண்ட நீதிபதிகள் இந்த திடீர் சோதனையை நடத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2016ம் ஆண்டு தனது கணவருடன் தமிழகத்திற்கு அகதியாக சென்ற நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் கடல்வழியாக இலங்கை வரமுயற்சித்துள்ளார்.

இதன்போது குறித்து இருவரும் கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கணவன், மனைவி இருவரும் வேறு, வேறு முகாமில் வீட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்த உதவித்தொகை மற்றும் நாளாந்த கொடுப்பனவு 100 ரூபா என்பன நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பெண் உணவுக்கு வழியின்றி தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக பட்டினியாக இருந்து வந்துள்ளார். காவலுக்கு இருக்கும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண் அவ்வப்போது பசியை போக்கி வந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் வழியாக இராமநாதபுரம் முதன்மை நீதிபதியின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டை தொடர்ந்து நீதிகள் குழு குறித்த முகாமில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது போது மூன்று மணி நேரம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. விசாரணைகளின் பின்னர் நாளாந்தம் வழங்கப்படும் 100 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like