காதலனைக் கைவிட்டு- பொம்மையதை் திருமணம் செய்யும் இளம்பெண்!!

இளம் பெண் ஒருவர் சாம்பி எனப்படும் பேய் பொம்மையை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் அதையே திருமணம் செய்து கொள்ளவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெலிசிட்டி காட்லிக் என்ற பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாம்பி பொம்மை பரிசாகக் கிடைத்தது. இதையடுத்து கெல்லி என பெயர் வைக்கப்பட்ட அந்த பொம்மையை காட்லிக் தீவிரமாக காதலிக்கத் தொடங்கினார். முன்னர் இளைஞரை காதலித்து வந்த காட்லிக் அவரை பிரிந்த நிலையில் கெல்லி பொம்மையைக் காதலித்து வருகிறார்.

இப்படியான வினோத செயலில் ஈடுபட்டு வரும் காட்லிக் கூறுகையில், நான் கெல்லியுடன் நெருக்கமான அன்பை கொண்டுள்ளேன். எங்களது உறவை பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். என் கையில் கெல்லியின் பெயரை பச்சை குத்தியுள்ளேன், எதிர்வரும் செப்ரெம்பரில் எனக்கும் கெல்லிக்கும் திருமணம் நடக்கவுள்ளது.

கெல்லி மீது நான் கொண்ட காதலை மாற்றி கொள்ள முடியாது, நான் கெல்லியுடன் இருக்கும் போது மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். மனிதர்களை தான் காதலிக்க வேண்டும், இது போன்ற பொம்மையை காதலிக்கக்கூடாது எனப் பலர் கூறுகிறார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை எனக் கூறியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like