மாணவர்களிடம் லஞ்சம் கோரிய- பேராசிரியர் பதவிநீக்கம்!!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், பேராசிரியர் ஒருவர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பதவிநீக்கம் செய்யப்படவுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மீதான முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு தென் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, குறித்த பேராசிரியரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like