சிங்கள மயமாகும் – சிவனொளிபாதமலை!!

இலங்கையில் பிரசித்திப்பெற்ற மத வணக்கஸ்த்தளங்களுள் ஒன்றான சிவனொளிபாதமலையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மாற்றங்கள் அங்கு செல்லும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிவனொளிபாத மலையின் தொடக்கப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை சைவ மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன முறுகல்களும் இன மேலாதிக்கங்களும் கடுமையாக நிலவி வந்த நிலையில், இவ்வளவு காலமும், சிவனடி பாதம் என இடம்பெற்றிருந்த பெயர்ப்பலகை இப்போது திடீரென கௌதமபுத்தரின் ஸ்ரீ பாதஸ்தானம் என மாற்றப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like