விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து மர்மநபர் தாக்குதல்!!

திருகோணமலை – பம்மதவாச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு மறைந்திருந்து கல் வீச்சு நடத்திய சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை, சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியினூடாக பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது சிலர் வீதியோரத்தில் மறைந்திருந்து கல்வீச்சு நடத்தியதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவத்தால் விசேட அதிரடிப்படையினர் பயணித்த பஸ்ஸின் முன் கண்ணாடி உடைந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை துரத்தி மடக்கிப்பிடித்துள்ளதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கல்வீச்சு நடத்திய நபர் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்தவர் எனவும் அவர் மொறவெவ, கன்னியா மற்றும் பம்மதவாச்சி பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடமாடி வருபவர் எனவும் அப்பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கல்வீச்சு நடத்தியவரை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like