எதுவும் நினைவில்லை- சமாளித்த மகிந்த!!

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எனக்கு எதுவும் நினைவில்லை என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் மகிந்தவிடம் இன்று வாக்குமூலம் பெற்றனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மகிந்த,

“ஐவரடங்கிய குற்றபுலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர், ஊடகவியலாளர் கீத் நொயர் தொடர்பில் விசாரிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது எனக்கு நினைவில் இல்லை, இவ்வாறான செயற்பாடுகள் அரசியல் தேவை கருதியே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய சபாநாயகரே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவ்வாறான விசாரணைகளுக்கு முகம் கொடுப்பது தற்போது வாடிக்கையாகி விட்டது” என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like