மஹிந்தவிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை: கீத்­நொயார் கடத்தல் விவ­காரம் தொடர்பில் வாக்­கு­மூலம் பதிவு

த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை , சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை,ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை மற்றும் நொயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் நேற்று விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

குறித்த சம்­பவம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அறிந்­துள்ள தக­வல்­களை வெளிப்­ப­டுத்தும் நோக்கில், சுமார் இரண்­டரை மணி நேரம் இந்த விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்டு வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.

கீத் நொயார் விவ­கா­ரத்தை விசா­ரணை

செய்யும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பீ.எஸ். திசே­ராவின் வழி நடத்­தலில் பிர­தான விசா­ரணை அதிகாரிகளான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் குமார உள்­ளிட்ட ஐவர் கொண்ட சிறப்புக் குழு இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது.

நேற்று முற்­பகல் 11.35 மணி முதல் பிற்­பகல் 1.55 மணி வரை இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. இதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம், கீத் நொயார் கடத்­தப்­பட்­டது முதல்  அவர் விடு­விக்­கப்­படும் வரையில் பரி­மாற்­றப்­பட்­ட­தாக கண்­ட­றி­யப்­பட்டுள்ள தொலை­பேசி அழைப்­புக்கள் தொடர்­பிலும், கீத் நொயாரை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டமை தொடர்­பிலும், ஊடகங்களில் அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக அப்­போது பிர­சு­ர­மான சில விட­யங்கள் தொடர்­பிலும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கேள்வி எழுப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணைக்கு முன் சென்ற அறி­வித்தல்

நேற்று 17 ஆம் திகதி வெள்­ளி­யன்று குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு முன்னள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவு முதலில் அறி­வித்தல் அனுப்­பி­யுள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் கையெ­ழுத்­துடன் இந்த அறி­வித்தல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் அதன் பின்னர் இடம்­பெற்ற சில நட­வ­டிக்­கை­களை அடுத்து நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் கொழும்பு 7 , விஜே­ராம வீதியில் உள்ள உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் வைத்து விசா­ரணை நடாத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

மஹிந்­தவின் வீட்டின் முன் கூடிய ஒன்­றி­னைந்த எதிர்க்­கட்­சி­யினர்:

நேற்று முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை செய்­வதை அறிந்­து­கொண்ட ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரும், அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் பலரும் கொழும்பு 7 , விஜே­ராம வீதியில் உள்ள மஹிந்­தவின் வீட்டின் முன்னாள் ஒன்று கூடினர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுசில் பிரேம் ஜயந்த , எஸ்.பி. திஸா­நா­யக்க, கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, பவித்ரா வன்னி ஆரச்சி, சுதர்­ஷனி பெர்­ணான்டோ புள்ளே, ரோஹித்த அபே குன­வர்­தன, குமார வெல்­கம , தினேஷ் குன­வர்­தன, ஜனக பண்­டார தென்­னகோன், உதய கம்­மன்­பில உள்­ளிட்­ட­வர்­களும் மாகாண சபை மற்றும் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் பலரும் இவ்­வாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் இல்­லத்­திலும், இல்­லத்­துக்கு முன்­பா­கவும் கூடினர். பிக்­குகள் உள்­ளிட்ட சர்வ மத குரு­மாரும் அங்கு வருகை தந்­தனர்.

வீட்டில் இருந்து வெளி­யே­றிய மஹிந்த:

நேற்று முர்­பகல் 10.00 மணிக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த நிலையில், அத்­தி­யா­வ­சிய கருமம் ஒன்­றுக்­காக செல்­வ­தாக கூறி, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த அவ்­வே­ளையில் வீட்டில் இருந்து வெளி­யேறிச் சென்றார்.

சி.ஐ.டி.யின் வரு­கையும், மஹிந்­தவின் வரு­கையும்

அதன் பின்னர் நேற்று முற்­பகல் 11.20 ஆகும் போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் விஜே­ராம இல்­லத்­துக்கு 61 – 7451 என்ற நீல ஜீப் வண்­டியில் வருகை தந்­தனர்.

உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பீ.எஸ். திசே­ராவின் தலை­மையில் பிர­தான விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா உள்­ளிட்ட ஐவர் இவ்­வாறு வருகை தந்­தனர்.

வீட்டில் இருந்து வெளி­யே­றிய மஹிந்த, சி.ஐ.டி.யினர் வருகை தந்து 10 நிமி­டங்­களின் பின்னர், முர்­பகல் 11.33 மணிக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­த­ன­வுடன் வீடு திரும்­பினார். இத­னை­ய­டுத்து அவ­ரிடம் முற்­பகல் 11.40 முதல் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்ப்ட்ட விட­யங்கள்

கீத் நொயார் கடத்­தப்­பட்ட சில நிமி­டங்­களில், அப்­போ­தைய நேஷன் பத்­தி­ரிகை ஆசி­ரியர் அப்­போ­தைய அமைச்­சரும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான கரு ஜய­சூ­ரி­யவை அழைத்­தமை தொடர்­பிலும் அதன் பின்னர் கரு ஜய­சூ­ரிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை அழைத்­தமை தொடர்­பிலும் , அதன்­பின்னர் மஹிந்த – கோத்தா, கோத்தா – கபில ஹெந்த விதா­ரண, ஹெந்த விதா­ரண – அமல் கரு­ணா­சே­கர, அமல் கரு­ணா­சே­கர – மேஜர் புளத்­வத்த ஆகி­யோ­ருக்கு இடையில் இடம்­பெற்ற தொலை­பேசி கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு குற்றப் புல­ன­யவுப் பிரி­வி­னரால் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

‘ கீத் நொயார் கடத்­தப்­பட்ட பின்னர் அப்­போ­தைய நேஷன் பத்­தி­ரிகை ஆசி­ரியர் கிரி­ஷாந்த குரே, முதலில் அப்­போ­தைய அமைச்­சரும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான கரு ஜய­சூ­ரி­யவை தொடர்­பு­கொண்­டுள்ளார்.

கரு ஜய­சூ­ரி­யவின் வீட்டு தொலை­பேசி இலக்­க­மான 0112552072 இற்கு அழைத்தே அவர் தகவல் கொடுத்­துள்ளார். இத­னை­ய­டுத்து கரு ஜய­சூ­ரிய முன்னாள் ஜன­ட­ஹி­ப­தி­யான உங்கள் வீட்டு தொலை­பேசி இலக்­க­மான 0114733200 எனும் சி.டி.எம். இலக்­கத்­துக்கு அழைத்து தகவல் வழங்­கி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து நீங்கள் , கோத்­தா­பா­ய­வுக்கும் , கோத்தா ஹெந்த வித்­தா­ர­ண­வுக்கும், ஹெந்­த­வித்­தா­ரண – 8 ஆம் சந்­தேக நபர் அமல் கரு­ணா­சே­க­ர­வுக்கும் அழைத்­துள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்தே கீத் நொயார் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இது தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?’ என சி.ஐ.டி.யினர் மஹிந்­த­விடம் தொலை­பேசி வலை­ய­மைப்பு தக­வல்­க­ளையும் காட்டி கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்­துடன் கீத் நொயார் கடத்­தப்­பட்ட போது உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­ச­ராக இருந்த தற்­போ­தைய சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் புல­னாய்வுப் பிரிவு விசா­ரணை செய்த போது வெளிப்­பத்­தப்­பட்ட விட­யங்­களும் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு எடுத்­து­ரைக்­கப்­பட்டு விளக்கம் கோரப்­பட்­டுள்­ளது. .

‘ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட இரவில் நேஷன் பத்­தி­ரி­கையின் அப்­போ­தைய ஆசி­ரியர் லலித் அழ­ககோன், உரி­மை­யாளர் கிரி­ஷாந்த குரே ஆகியோர் என்னை தொடர்­பு­கொண்­டனர்.

கீத் நொயார் கடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை எப்­ப­டி­யேனும் மீட்­டுத்­த­ரு­மாறும் அவர்கள் என்­னிடம் கோரினர். அத­னை­ய­டுத்து நான் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு அழைத்தேன்.

அவ­ரிடம், கீத் நொயார் கடத்­தப்­பட்­டுள்ளார். நிச்­சயம் இது திட்­ட­மிட்ட நட­வ­டிக்கை. இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அரசாங்கத்தில் இருக்க வெட்கப்படுகின்றேன்.

கீத் நொயாருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அமைச்சுப் பதவியை துறந்து, பிரசித்தமாக காரணத்தை அறிவித்துவிட்டு அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுவேன். எனக் கூறினேன்’ என்ற சபாநாயகர் கரு ஜயசூரியவின் வாக்கு மூலத்துக்கும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

எனினும் அனைத்து கேள்விகளுக்கும் சமாளிக்கும் வண்ணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.

விசாரணையின் பின்னர் திரும்பிய சி.ஐ.டி.:

இந் நிலையிலேயே வாக்கு மூலத்தை பதிவு செய்துகொண்ட குற்றப் புலனயவுப் பிரிவினர் பிற்பகல் 2.00 மனிக்கு அங்கிருந்து திரும்பினர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like