கொழும்பு செல்ல அனுமதிக்க மறுத்த பெற்றோர்! வவுனியா யுவதி எடுத்த அதிர்ச்சி முடிவு

வவுனியாவில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா – சாம்பல் தோட்டம் பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சாம்பல் தோட்டம், ஐயப்பர் வீதியில் வசித்து வரும் 22 வயதுடைய வி.வித்தியா என்ற யுவதியே தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்வதற்கு குடும்பத்தாரிடம் அனுமதி கோரியுள்ளார்.

கொழும்பு செல்வதற்கு குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இந்த சமயத்தில்அவர் வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like