“பிரபாகரனின் சீருடையை அகற்றுமாறு உத்தரவிட்டார் சரத்பொன்சேகாவே”

“விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்” என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே சிங்கள பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சசிகலகே ,

“பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார்.

பிரபாகரனின் உடல் முதலில் தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா கடும் சீற்றமடைந்தார். அவர் சீருடைளை அகற்ற உத்தரவிட்டார்.

இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சகிகலகே இறுதி யுத்தத்தில் படையணியை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like