நாய் உருவில் பெற்றோரைத் தேடி வந்த உயிரிழந்த குழந்தை! யாழில் நடத்த நெகிழ்ச்சியான சம்பவம்

இறந்து போன குழந்தை ஒன்று மீண்டும் தனது பெற்றோரைத் தேடி நாய் உருவில் வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த டிவேனிகா சுதர்சன் என்ற இரண்டரை வயது சிறுமியின் மர்ம மரணமடைந்தார். இந்த சம்பவம் அங்குள்ள மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பெற்றோர் சிறுமிக்கு இறுதி கிரியை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

எனினும் இறுதி நிமிடத்தில் சிறுமியிடம் ஏற்பட்ட அசைவுகள் காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என அறிந்த பெற்றோர் மீண்டும் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அது பயனளிக்காமல் சிறுமி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சிறுமியை அடக்கம் செய்த இடத்திற்கு 8ஆம் நாள் காரியங்கள் செய்வதற்காக சென்ற பெற்றோருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

சிறுமியின் கல்லறை அருகே இருந்த நாயொன்று சிறுமியின் பெற்றோரை ஆக்கிரமித்துக்கொண்டு, அவர்களையே சுற்றி சுற்றி வந்துள்ளது.

மேலும், சிறுமியின் பெற்றோருடன் அவர்களது வீட்டிற்கும் குறித்த நாய் வந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சிறுமியின் கல்லறை அருகே இருந்த நாய் தமது மகள் போலவே அசைவுகளைக் காட்டுவதாகவும், தமது மகளைப் போலவே தம்மிடம் நெருங்குவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், உயிரிழந்த தம்முடைய மகள்தான் நாய் உருவில் எங்களை தேடி வந்துள்ளார் என தெரிவிக்கும் குறித்த பெற்றோர் அந்த நாயை தம்முடனேயே வைத்து பராமரித்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் அங்குள்ள மக்களின் மனதை உருகச் செய்துள்ளதுடன், நெகிழ்ச்சியையும் கண்ணீரையும் ஒருசேரத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like