சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது நல்லூர் நாடகத் திருவிழா 2018

செயல் திறன் அரங்க இயக்கம் வருடாந்தம் நடத்துகின்ற நல்லூர் நாடகத் திருவிழா 2018 எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 01திகதி தொடக்கம் 5 திகதி வரை நடைபெறவுள்ளது. நல்லூர் பெருந்திருவிழாக்காலத்தில் நடைபெறும் இந்த நாடகத் திருவிழாவில் பல்வேறு வகையான நாடகங்கள் மேடையேறுகின்றன. சிறுவர்களுக்கு பெருவிருந்தாக அமைகின்ற இந்த நாடகத் திருவிழா ஆறாவது தடவையாக நடைபெறுகின்றது.

நல்லூர் குறுக்கு வீதியில் அமைந்துள்ள செயல் திறன் அரங்க இயக்கத்தின் திறந்த வெளி அரங்கில் இந்த நாடக விழா நடைபெறவுள்ளது. தினமும் மாலை 7.00மணிக்கு ஆரமப்மாகும் இந்த விழா இரவு 9.00 மணி வரை தொடரும். தினமும் இரண்டு நாடகங்கள் மேடையேறவுள்ளன.

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் ‘பஞ்சவர்ண நரியார், கூடிவிளையாடு பாப்பா மற்றும் முயலார் முயல்கிறார். சிறுவர் நாடகங்களும்; தே.தேவானந்தின் ‘ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்பது பேரும்’ சிறுவர் நாடகம் ‘ஏகாந்தம்’ வேடமுக நாடகம், ‘பாட்டி’ பொம்மைகள் நாடகம் மற்றும் செந்திலின் ‘என்னால் முடியும்’ ஓராள் நாடகம் நாட்டார் வழக்கியற்கழகத்தின் ‘சத்தியவான் சாவித்திரி’ ‘மயானகாண்டம்’ இசைநாடகங்களும் மொத்தம் பத்து நாடகங்கள் மேடையேறவுள்ளன.

ஈழத்தின் நாடக வரலாற்றில் தனக்கென ஒரு தினித்துவமான இடத்தைக் கொண்டு இயங்கிவருகின்ற செயல் திறன் அரங்க இயக்கத்தின் நல்லூர் நாடகத் திருவிழா அரங்கு நிறைந்த காட்சியாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழமை. கட்டணங்கள் எதுவும் அறவிடப்படாது முற்றிலும் இலவசமாகக் இந்த நாடகத் திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள், புலம்பெயர் தேசங்களிலிருந்து வந்திருக்கக்கூடிய தமிழ் உறவுகள் சுற்றுலாப்பயணிகள் எனப்பலரும் ஆர்வத்துடன் இதில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கதாகும். சிறுவர்கள் பெரியவர்களுக்காக நடிக்கின்ற நாடகங்களை நல்லூர் நாடகத் திருவிழாவிலேயே காணமுடியும். அரங்கப் பயிற்சிபெற்ற சிறுவர்கள் நடிக்கின்ற நாடகங்களுக்கான களமாகவும் நல்லூர் நாடகத் திருவிழா விளங்குகின்றது.

ஓகஸ்ட்; விடுமுறைக்காலத்தில் சிறுவர்களுக்கு இதுவொரு பெருவிருந்தாக, ஆனந்தமாக அமைகிறது. ஆர்வலர்களைப் பங்கு கொள்ளுமாறு செயல் திறன் அரங்க இயக்கத்தினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.


T.Thevananth,M.A,M.Sc
President
Council of Non Governmental Organisation – Jaffna District
Director, Centre for Civic Media
Jaffna, SriLanka

Director, Active Theatre Movement
Jaffna,Srilanka

Phone No: office: 0094212229873, Mobile: 0094773112692
E-mail: [email protected], [email protected]
Blog: https://tthevananth.blogspot.com
Skype: thevan3