மிருகமாக மாறிய தந்தை : ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி மற்றும் 2 மகள்கள்!!

டெல்லியில் மகளின் திருமணத்திற்கு பணம் சேர்க்க முடியாததால், மனைவி மற்றும் ரிலாண்டு மகள்களை தந்தையே கொடூரமாக இரும்பு ராடால் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சங்கம் விஹார் பகுதியை சேர்ந்தவர் நந்த கிசோர் (55). இவருக்கு 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது.

சைக்கிள் கடை வைத்து வீட்டின் வருமானத்தை கவனித்து வந்த கிசோரால், அடுத்த இரண்டு மகள்களின் திருமணத்திற்கு போதுமான அளவு பணம் சேர்க்க முடியவில்லை.

இதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்த கிசோர் நேற்று இரவு, அவருடைய மனைவி வித்யாவதி(50), மகள்கள் கவிதா (22) மற்றும் சுமன் (24) உறங்கிக்கொண்டிருந்த அறைக்கு இரும்பு கம்பியுடன் சென்றுள்ளார். அங்கு உறங்கிக்கொண்டிருந்த மூன்று பேரையும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மூன்று பேரும் சத்தமிட்டவாறே மயங்கி விழுந்தனர்.

இதற்கிடையில் கதறும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அவரது மூத்த மகன் ராகுல், வேகமாக அம்மாவின் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அங்கு ரத்தம் வெள்ளத்தில் அம்மாவும், தங்கைகளும் கிடக்க, கையில் இரும்பு கம்பியுடன் அறையின் மூலையில் கிசோர் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக தன்னுடடைய தம்பிகள் ரவி மற்றும் மொஹித்தை எழுப்பி விட்டு ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமாகியுள்ளது. பின்னர் ஒரு வழியாக அவர்களை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு கவிதா அடுத்த சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கிசோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like