இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

தற்காலிக வாக்காளர் இடாப்பில் தத்தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாக்காளர் இடாப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.elections.gov.lk இணையத்தளத்திலும் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like