அமெரிக்க டொருக்கு எதிராக சிறிலங்கா ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை…!!

அமெரிக்க டொருக்கு எதிராக சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிந்து வந்தது. இது நேற்று புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த 14 நாட்களில், டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.32 ரூபாவினால் (0.82 வீதம்) வீழ்ச்சியடைந்தது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 7.73 ரூபாவினால் (4.99 வீதம்) வீழ்ச்சியடைந்திருக்கிறது.