பிரபல நடிகை திடீர் கைது

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்த பிரபல நடிகை ராக்கி சாவந்த் இன்று பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராமாயணம் என்ற இதிகாசத்தை எழுதிய வால்மீகி குறித்து இவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ராக்கி சாவந்த், வால்மிகி குறித்து ஆபாசமான கருத்தைக் கூறி இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை ராக்கி சாவந்திற்கு லூதியானா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை கைது செய்து மார்ச் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில்  இன்று மும்பை வந்த லூதியானா தனிப்படை போலிசார், ராக்கி சாவந்தை அவரின் வீட்டில் வைத்து கைது செய்தனர். நடிகை ராக்கி சாவந்த் தமிழில் சரத்குமார் நடித்த கம்பீரம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like