இலங்கை செல்லும் பெண்களுக்கு ஆபத்தா? ஐரோப்பிய பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் மர்மமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண், தான் பாதிக்கப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அருகம்பே கடற்கரையில் தனக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

“நான் நண்பர்களுடன் இலங்கையின் அழகை பார்க்க வந்தேன். இலங்கை மிகவும் அழகான நாடு. எனினும் சில விடயங்கள் சரியில்லை. நாங்கள் கடற்கரையில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்வதற்கு செல்வோம். அவ்வாறே நானும் ஒரு விருந்திற்கு சென்றேன்.

நான் விருந்திற்கு சென்று மயக்கமடைந்து விட்டேன். எனக்கு என்ன நடந்ததென தெரியாது. எழுந்து பார்க்கும் போது, நான் கடலுக்கு அருகிலிருந்து படகொன்றில் இருந்தேன். எனது உடலில் ஏதோ வலியொன்றை உணர்ந்தேன். நான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளேன் என புரிந்து கொண்டேன். எனினும் யார் அப்படி செய்ததென எனக்கு தெரியாது. எத்தனை பேர் இந்த கொடுமையை செய்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.

எனக்கு இலங்கை வேண்டாம் என்றாகிவிட்டது. நாம் மனிதர்களோடு இருக்க வேண்டும் என்றால் உணர்வு ஒன்று இருக்க வேண்டும். எங்களுக்கு விருப்பம் ஏற்பட வேண்டும். எங்களை மயக்கமடைய செய்து இவ்வாறான வேலைகள் செய்வது மிகவும் அருவருக்கத்தக்கது. நாங்கள் மீண்டும் இலங்கைக்கு வர மாட்டோம். எங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அருகம்பே கடற்கரையின் உண்மை நிலைமைகளை கூறுவோம்.

இலங்கை ஒரு அழகான நாடு என உலகத்திற்கு பிரச்சாரம் செய்துவிட்டு எங்களுக்கு இப்படி செய்வதில் பயனில்லை. எங்கள் பாதுகாப்பு குறித்தும் சிந்திக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஐரோப்பிய பெண் குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like