இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜை

 

பிரித்தானிய பிரஜை ஒருவர் இலங்கையில் கொடூரமாக தாக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள Rochdale என்ற நிறுவனத்தின் உதவி ஊழியராக செயற்பட்ட Khuram Shaikh இலங்கையில் வைத்து தாக்கப்பட்டார். இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளில் அவர் மீது 45 காயங்கள் உள்ளமை தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் Khuram Shaikh கொல்லப்பட்டதுடன், அவரது காதலி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டிருந்தார்.

2011 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று இலங்கை ஹோட்டல் ஒன்றில் Shaikh தாக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் 45 காயங்களுக்குள்ளாகியிருந்தார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த சம்பத் விதானபத்திரன உட்பட மூவர் இந்த சம்பவம் தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like