வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலைமை..!!

இலங்கையில் போதை பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் பாங்கொக் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து தப்பி சென்ற நிலையில் தற்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலிய பெரேரா விவல ஆராச்சிகே என்ற நபர் கடந்த வியாழக்கிழமை Chong Nonsi பகுதியில் உள்ள Sathu Pradit Soi 19 என்ற ஹோட்டலில் அரை ஒன்றை பெற்று தங்கியுள்ளார்.

இதன் போது, அவரது கடவுசீட்டை வழங்குமாறு அதிகாரிகள் அறிவித்த போது, அவர் இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர் என தெரியவந்ததாக இன்றைய தினம் பாங்கொக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கத்துவ நாடுகளிடம் இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளின் பேரில், குடிவரவு பணியகத்தின் அலுவலர்கள், சுற்றுலா பொலிஸ் பணியகம், ரோந்து மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு, இன்டர்போல் மற்றும் ஏனைய முகவர் நிலையங்கள் இந்த நபர் குறித்து கண்காணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த 2013ஆம் ஆண்டு, சுற்றுலா விசா மூலம் தாய்லாந்திற்கு சென்றள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு தான் இன்டர்போலினால் தேடப்படுவதாக தகவல் அறிந்து கொள்ளும் வரை அவர் விசாவை தொடர்ந்து புதுப்பித்துள்ளாார்.

அதன் பின்னர் தான் கைது செய்யப்பட கூடும் என்ற அச்சத்தில் விசாவை புதுப்பிக்கவில்லை என குறித்த நபர் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய குறித்த நபர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார் என கூறப்படுகின்றது. இலங்கையில் மிகப்பெரிய போதை பொருள் கடத்தும் வலையமைப்பை அவர் நடத்தி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்கள் ஆயுள் தண்டனைக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like