ஏழு மாதங்களுக்கு முன்னர் இறந்த குழந்தையால் ஏற்பட்ட குழப்பம்…!!

நோய்வாய்ப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றுவதாகக் கூறி பல்வேறு இடங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டமையினால் பொது மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

எனினும் இப்படியொரு மோசடியில் ஈடுபட்ட மூவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த குழந்தை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தசை உருக்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயதுடைய சிறுவனின் புகைப்படத்தைக் காட்டி சந்தேக நபர்கள் பணம் சேகரித்துள்ளனர்.

கட்டுநாயக்க எவரிவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் நேற்றைய தினம் பணம் சேகரிக்கும் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 40, 39 மற்றும் 70 வயதுடையவர்கள் எனக் கூறப்படுகிறது. 40 வயதான நபர் 39 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்யும் எதிர்பார்ப்பில் உள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like