இலங்கையில் 3,000 பேர் தற்கொலை! வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த மூன்று வருடங்களுள், 2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதார ஊக்குவிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவலுக்கமைய, 2,586 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், இவர்களில் 677 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தற்கொலை செய்துகொள்வோரில், 19 சதவீதமானோர் திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், 11.6 சதவீதமானோர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விரக்தியால் தற்கொலை செய்தவர்களாகவும் உள்ளனர்.

மேலும், 10 சதவீதமானோர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாகவும், 35.18 சதவீதமானோர் அச்சுறுத்தல் காரணமாகவும் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, தற்கொலைகளை தடுப்பது தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான செயலமர்வொன்று சுகாதார அமைச்சு நாளை மறுதினம் (12), ஏற்பாடு செய்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like