யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்!

பொலிஸாரின் ஜீப் வண்டியை கடத்தி சென்ற 4 சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸாருக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடத்தி சென்ற சந்தேக நபர்கள் குறித்த ஜீப் வண்டியுடன் நேற்று இரவே கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம், கச்சாய், பாலவி பிரதேசத்தில் மணல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக சென்ற பொலிஸார் ஜீப் வண்டியை நிறுத்தி வைத்துள்ளனர். இதன் போது குழுவொன்று இணைந்து ஜீப் வண்டியை கடத்தி சென்றுள்ளது.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஜீப் வண்டியை துறத்தி சென்று சந்தேக நபர் மற்றும் ஜீப் வண்டியை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like