வவுனியா கனகராயன்குளம் சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் – கைதாகியுள்ள முன்னால் போராளி!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸார் தம்மை தாக்கியதாக கூறிய முன்னால் போராளி கைது

வவுனியா கனகராயன்குளம் தாவூத் உணவகம் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான முன்னால் போராளி வசந்தராஜ் என்பவருக்கும் குறித்த உணவகத்தை நடாத்திவரும் நபருக்குமிடையில் முறுகல்நிலை கடந்த பல மாதங்களாக தொடர்ந்த வண்ணம் இருந்தது இதற்கு காரணம் குறித்த உணவகம் நடாத்துவதற்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்த காலவரையறை கடந்த தை மாதத்துடன் முடிவடைந்தும் இதுவரையிலும் நடத்துனரால் காணி மீள் அளிக்கபடவில்லை என்பதுடன் காணியை உரிமை கோரவும் ஆரம்பித்தார் குத்தகைகாரரான இஸ்லாமியருக்கு தமிழர்கள் பூர்வீகமாக வாழும் அப்பிரதேசத்தில் நிலம் எங்கிருந்து வந்தது?

இது இவ்வாறிருக்க கடந்த 09.09.2018 அன்று இரவு கனகராயன்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிலர் தம்மை தாக்கியதாக காயங்களுடன் காணி உரிமையாளரான வசந்த ராஜ்,அவரது மனைவி 16வயது மகள் மற்றும் 14வயதான மகன் ஆகியோரும் கயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்கிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட போராளியான வசந்தராஜ் மற்றும் அவரது உறவினரான நவநீதன் ஆகியோரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலை படுத்தியதில் எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது எனினும் வசந்தராஜ் காயப்பட்டநிலையில் இருப்பதாலும் சிகிச்சை தேவைப்படுவதாலும் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனினும் கைவிலங்கு அணியப்பட்டே சிகிச்சை பெற்றுவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்கள் தெரிவிக்கையில் குறித்த உணவகத்தின் நடத்துனர் மீது நவநீதன் மற்றும் காணி உரிமையாளரான வசந்தராஜ் அவர்கள் வாளினால் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து அதை விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாகவும் தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் இதன் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்

மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் தொடர்ந்து கூறுகையில் குறித்த பொலிநிலைய பொறுப்பதிகாரி மீதான விசாரணையை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு ஒன்று விசாரணை செய்து வருவதாகவும் அதன் முழு அறிக்கையும் தமக்கு கிடைக்கப்பெற்றதும் அறிக்கையின் பிரகாரம் பொறுப்பதிகாரி மீதும் உணவக நடத்துனர் மீதும் தவறு இருக்குமாயின் நிச்சயமாக அவர்களையும் நாம் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்

எது எப்படி எனினும் சிறுவர்கள் பெண்கள் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது அது தவறு தானே? இல்லை பொலிஸார் தம்மீது உள்ள குற்றச்சாட்டை மறைப்பதற்க்கு கபட நாடகம் ஆடுகிறார்களா? என்று சந்தேகமும் எழுகின்றது சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் இவர்களே அப்பாவி தமிழர்கள் மீது கொடூரங்களை நிகழ்த்துவதென்பது நல்லாட்சி அரசின் மீது தமிழர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க வைத்துள்ளதென்பதுடன் தமிழர்கள் தொடர்ந்தும் அரசியல் நீரோட்டத்தில் அகிம்சை ரீதியாக பயணிப்பதை கேள்விக்குறியாக்கும் விதமாகவும் அரசு செயற்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்