நல்லூரில் மாட்டிறைச்சி விற்கத் தடை -சிவசேனை அமைப்பு வரவேற்பு!!

நல்­லூர்ப் பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் மாட்­டி­றைச்சி விற்­ப­னைக்­குத் தடை விதித்துடன், எதிர்­கா­லத்­தில் மாட்­டி­றைச்­சிக் கடை­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வ­தில்லை என்றும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு சிவசேனை அமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது.

நல்­லூர் பிர­தேச சபை­யின் நேற்றைய இந்­தத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது.

நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் பசு வதை­யைத் தடுக்­கும் வகை­யி­லும் சைவ சமய விழு­மி­யங்­க­ளைப் பேணும் வகை­யி­லும் மாட்­டி­றைச்­சிக் கடை­க­ளுக்­கு­து் தடை விதிக்க வேண்­டும். அதற்கு முன்­மா­தி­ரி­யாக மாட்­டி­றைச்­சிக் கடை­களை இனி­மேல் குத்­த­கைக்கு விடக்­கூ­டாது என்றும் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் இந்­தத் தீர்­மான வரை­புக்கு ஆத­ர­வ­ளித்­த­னர். அனை­வ­ரின் ஆத­ர­வு­டன் அது தீர்­மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் நல்லூர் பிரதேச சபையின் முன்மாதிரியான நடவடிக்கையை சிவசேனா அமைப்பு வரவேற்றுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like