முகமாலை காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட தேவ மாதவின் சிலை

வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் முகமாலையில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இருந்து காணாமல் போன தேவ மாதாவின் சிலை ஒன்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதியில் கிடைத்துள்ளது.

முகமாலை உட்பட அங்குள்ள பிரதேசங்களில் நடந்த அதிகளவான மோதல்கள் காரணமாக தேவாலயம் அழிந்து விட்டது.

தேவாலயத்திற்கு அருகில் குடியிருந்தவர்கள் இன்னும் மீளகுடியேறவில்லை. எனினும் தமது காணிகளை பார்க்க அடிக்க இந்த மக்கள் வந்து செல்வதுண்டு.

இவ்வாறு தமது காணிகளை பார்க்க வந்த மக்கள் காட்டில் ஏதோ இருப்பதை கண்டு அதனை தேடிய போது மாதாவின் சிலை கிடைத்துள்ளது.

மாதா சிலையை வைக்க ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கும் வரை மரத்தடியில் வைத்து வழிபட முகமாலை மக்கள் தீர்மானித்துள்ளனர். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்ற காரணத்தினால், முகமாலையில் மக்கள் குடியேற இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.