வடக்கில் சிறுநீரகங்களை விற்கமுயலும் தமிழ் பெண்கள்!

இலங்கையில் வடக்கே போரினால்பாதிக்கப்பட்டு கணவரை இழந்த விதவைகளும், போரால்அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும்சில பெண்களும் அதிக வட்டிக்கு தாம் பெற்றுக்கொண்ட நுண்கடன்களை திருப்பிச்செலுத்துவதற்காகதமது சிறுநீரகங்களில் ஒன்றை விற்க முயற்சித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத்தகவல் இலங்கைக்குசென்ற ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரால் பகிரங்கப்படுத்தபட்டுள்ளது.

நுண்கடன் நிறுவனங்களிடம்பெரிய வட்டிக்கு கடன்பெற்ற பெண்களிடம் அந்த நிறுவன அதிகாரிகளால் பாலியல் லஞ்சம்கோரியவிடயங்கள் ஏற்கனவே பகிரங்கப்பட்டுள்ளன. இதனை ஐ.நா நிபுணரும் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில் இவ்வாறானபாலியல் லஞ்ச அவமானங்களைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சிறுநீரகங்களைவிற்றுக் கடன்களை செலுத்த முயற்சிப்பதாக ஐ.நா தரப்பில் இருந்து தரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கடனைக்கட்டவழியில்லாதபெண்கள் தமது சிறுநீரகங்களை விற்பனை செய்ய முயற்சித்த சம்பவங்கள் குறித்து சுட்டிக்காட்டியஅவர் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட வாழ்வுகுறித்த கரிசனையால் இதுதொடர்பான மேலதிகவிபரங்களை பொதுவெளியில் வெளியிடுவதை தவிர்த்திருந்தார்.

ஆயினும் இந்த விபரங்கள்குறித்து அவர் மேலதிக நடவடிக்கைகளுக்குரிய நகர்வுகளை ஐ.நா மேலிடத்தில் கோருவார் எனஎதிர்பார்க்கபடுகிறது.

அவல நிலையில் இருக்கும்பெண்களின் சிறுநீரகங்களை குறைந்த விலையில் அபகரிப்பதற்கென ஒரு இரகசிய வலையமைப்பு இலங்கையில்செயற்படுவது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like