எதிர்வரும் நாட்களில் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்குமாறு கோருகிறது ஜனநாயக போராளிகள்!

தமிழர் தாயக அரசியல்பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்றுவரும் இச்சூழலில்.

ஓடுக்கப்பட்ட ஓர் தேசியஇனத்தின் அரசியல் பொருளாதார சமூகவிடுதலையினை நேசித்து அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து நல்லூர் வீதியில் வளர்ந்த வேள்வித்தீயில் மூச்சடங்கிப்போனவன் எங்கள் தியாகி திலீபன்.

திலீபனின் ஒற்றைக்கோரிக்கை கூட நிறைவேறாதநிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபன் அவர்களின் 31வது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள்
15 9 2018 இன்று காலை 10. 10 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் இடம்பெறுகிறது.

திலீபன் அவர்களது நினைவுநாட்கள் நடைபெறும் இக்காலங்களில் உறவுகள் கேளிக்கை களியாட்டங்களை தவிர்த்து திலீபனின் நினைவுகளைச்சுமந்து உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்குமாறு தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டிநிற்கின்றோம்.

திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம் திலீபனின் கனவு இன்னமும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது.
நன்றி
க.துளசி
ஊடகப்பிரிவு
ஜனநாயகபோராளிகள்கட்சி

Get real time updates directly on you device, subscribe now.

You might also like