வவுனியாவிலிருந்து பயணித்த பட்டா பத்து அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதி மொரவெவ பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிமோ பட்டா லொறியொன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிமோ பட்டா வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதியும் அவரது உதவியாளரும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான டிமோ பட்டா லொறி 10 அடி பள்ளத்தில் விழுந்து காணப்படுவதுடன் அதனை மீட்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like