சர­ண­டைந்த புலிகள் கொல்­லப்­ப­ட­வில்லை : முன்னாள் அமைச்சரின் கருத்து பார­தூ­ர­மா­னது

இறுதி யுத்­தத்­தின்­போது சர­ண­டைந்த விடு­த­லைப்­பு­லிகள் மற்றும் பொது­மக்கள் கொலை­செய்­யப்­பட்­டுள்­ளனர் என தெரி­வித்­தி­ருப்­பதை முற்­றாக நிரா­க­ரிக்­கின்றேன்.

பிர­பா­க­ரனின் தாய், தந்தை இரு­வரும் சர­ண­டைந்­ததால் அது­தொ­டர்­பான பொறுப்பை நாங்கள் நிறை­வேற்­றினோம் என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச்­சரும் சிறி­லங்கா சுதந்­திர கட்சி ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

சிறி­லங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

யுத்­தத்தை மேற்­கொண்ட இலங்கை இரா­ணு­வத்­தினர் மிகவும் மனி­தா­பி­மா­னத்­து­டனே செற்­பட்­டனர். அவர்கள் பொது­மக்­களை இலக்­கு­வைத்து யுத்தம் செய்­ய­வில்லை.

இது­தொ­டர்­பாக நாங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் வெளிப்­ப­டை­யாவே தெரி­வித்­தி­ருக்­கின்றோம். யுத்­தத்­தின்­போது பொது­மக்­களை இலக்­கு­வைத்து தாக்­குதல் நடத்தும் அள­வுக்கு எமது ராணு­வத்­தினர் இருக்­க­வில்லை என்­பதை உறு­தி­யாக தெரி­விக்­கின்றோம்.

இறுதி யுத்­தத்­தின்­போது விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் மற்றும் பொது­மக்கள் பலர் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­தனர். அவர்கள் தொடர்பில் நாங்கள் பொறுப்­புடன் செயற்­பட்டோம்.

ஆனால் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­ட­தாக எமது கட்­சி­யைச்­சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரி­வித்­தி­ருப்­பதை நாங்கள் முற்­றாக நிரா­க­ரிக்­கின்றோம். பிர­பா­க­ரனின் தாயும் தந்­தையும் சர­ண­டைந்­தி­ருந்­தனர். அவர்கள் விட­யத்தில் நாங்கள் பொறுப்­புடன் செயற்­பட்டோம்.

தயா­மாஸ்டர் விடு­தலை புலி­க­ளுடன் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­தவர். ஆனால் அவர் இறு­திக்­கட்­டத்தில் சர­ண­டைந்தார். அத­னால்தான் அவர் இன்னும் உயி­ருடன் இருக்­கின்றார்.

அத்­துடன் அவர் தற்­போது வெளிப்­ப­டை­யாக செயற்­பட்டு வரு­கின்றார். அதே­போன்று புலி­க­ளுடன் இருந்து சர­ண­டைந்த 12ஆயிரம் பேரை முறை­யாக பதி­வு­செய்து, அவர்­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்க நட­வ­டிக்கை எடுத்தோம். தற்­போது அவர்கள் சாதா­ரண மக்­க­ளுடன் இணைந்து வாழும் நிலைக்கு நாங்கள் அவர்­களை மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கின்றோம்.

யுத்தம் ஒன்று இடம்­பெ­றும்­போது இரண்டு தரப்­பிலும் மர­ணித்­தி­ருப்­பார்கள். அது­சா­தா­ரண விடயம். அதற்­காக சர­ண­டைந்­த­வர்­களை கொலை­செய்யும் அள­வுக்கு இரா­ணுவம் செயற்­ப­ட­வில்லை என்­பதை நாங்கள் பகி­ரங்­க­மாக தெரி­விக்­கின்றோம்.

சர­ண­டைந்த விடு­த­லைப்­பு­லிகள் மற்றும் பொதுமக்களை இராணுவத்தினர் கொலைசெய்ததாக இப்போது தெரிவிக்கின்றவர்கள் அந்த காலத்தில் ஏன் இதனை தெரிவிக்காமல் மறைத்தனர் என்று கேட்கின்றேன். இதனால் இந்த பிரசாரமானது மிகவும் பயங்கமானதாகும். அதனால் இதுதொடர்பில் எதிர்காலத்தில் அவரிடம் வாக்குமூலம் எடுக்கலாம் என்றார்.