யாழில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!

வீதியில் நடந்து சென்ற இளைஞன் இனந் தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப் பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்று நடந்துள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் காயமடைந்துள்ளார்.

அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like