யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிதி நிறுவனத்தில் கடந்த 19 ஆம் திகதி காலை சுமார் 18 இலட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டிருந்தது.
வழமை போன்று காலை நிதி நிறுவன பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக தயாராகியுள்ளனர்.
இந்த நிலையில், அங்கு கத்தியுடன் உள்நுழைந்த இருவர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில்குறித்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அவரது காதலன் என அறியப்படும் இளைஞன் மற்றுமொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.






