இதயத்தையே உருக வைக்கும் சோகம்-வாழப் போராடும் இளம்பெண்!

வாழப் போராடும் மக்கள் சிறிய விடயங்களுக்காக சோர்வடைந்து விடுகின்றனர். இதனால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் உதவியற்று இருக்கும் சிலர் வாழ்க்கையை சமாளிப்பதற்கு போராடுகிறார்கள்.

அவ்வாறு வாழப் போராடும் ஒரு பெண் தான் ஹர்ஷனி குமாரி. மிகவும் அழகான திறமையான பெண். நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.ஹர்ஷனியின் அப்பா ஒரு பொலிஸ் அதிகாரி. அம்மா தையல் கற்பிக்கும் ஆசிரியர். சாதாரணமான ஒரு குடும்பம்.

மரபியல் நிபுணராக வேண்டுமென பெரிய கனவு இருந்தது ஹர்ஷனிக்கு.இந்த நிலையில், உயர்தரம் படித்து முடித்து விட்டு மரபணு தொழில்நுட்பம் கற்கும் ஆசையில் மிகவும் கஸ்டப்பட்டு அவுஸ்திரேலியாவிற்குப் பயணமாகிறாள்.இதுவரை ஹர்ஷனியின் வாழ்க்கை அழகாக இருக்கிறது.

அங்கு சென்று இரண்டு வாரங்களில் எல்லாம் மாறிப்போகிறது.ஒரு நாள் காலையில் ஹர்சனி படித்துக்கொண்டிருக்கும் போது அவளது மேசையில் இருந்த போனாவை எடுத்து குறிப்பு எழுதும்போது ஹர்ஷினியின் கையிலிருந்த பேனா அதேநேரத்தில் கீழே விழுந்துள்ளது.

அதைப் பற்றி எதையும் எண்ணாமல் அவள் கீழே விழுந்த பேனாவை இரண்டு மூன்று தடவைகள் எடுக்க முயன்று அதன் எழுதியுள்ளார். அதன் பின்னர் ஹர்ஷனி இதுதொடர்பாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.கையில் பேனா பிடிக்க கஸ்டமாக உள்ளதாகவும், மருத்துவர்களிடம் காட்டி மருந்து எடுத்ததாகவும் அதற்கும் சரியாகவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2004ம் ஆண்டில் ஹர்ஷனி அவுஸ்திரேலியாவிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது ஹர்ஷனி நடக்கும்போது சிரமத்துடன் ஒரு காலால் குதித்து குதித்து நடந்துள்ளார். பெற்றோர்கள் இந்த துக்கத்தை தாங்க முடியாது இருந்துள்ளனர். இலங்கை வந்து இரண்டு வாரங்களில் ஹர்ஷனி நேரடியாக படுக்கையில் விழுந்துள்ளார்.

இது அனைவரது இதயத்தையும் உலுக்கியது.ஹர்ஷனியால் பேச முடியாது. உடலில் எந்த உறுப்புக்களும் இயங்கவில்லை. குடும்பத்தினர் மட்டுமல்ல அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஹர்ஷனியின் அம்மாவின் அனைத்தும் விற்று மருந்துசெய்தும் அவள் குணமடையவில்லை. பெற்றோர் மகளின் மருந்துக்காக போராடி வருகிறார்கள்.இன்று இந்த சம்பவம் நடந்து 14 வருடங்கள் ஆகின்றன.

இந்த நிலைக்குப் பின்னர் ஹர்ஷனியின் குடும்பம் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது.தங்களிடம் இருந்த விற்கக்கூடிய எல்லா பொருட்களையும் விற்று மருந்து செய்தாயிற்று. தற்போது அவர்களிடம் விற்பதற்கு எதுவுமில்லை.ஹர்ஷனிக்கு வைத்தியர்கள் கொடுக்கச்சொன்ன பால்மாவுக்கு மாத்திரம் ஒரு நாளைக்கு 2200 ரூபா செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரகதி மாவத்தை (பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக), ஹோமாகமவில் வசிக்கும் ஹர்ஷனி உயிர்வாழ்வதற்கு முடிந்தளவு ஒரு பால் மா பெட்டியாவது வாங்கி கொடுத்து உதவுமாறு அவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.