யாழில் திடீரென சுற்றிவளைத்த பொலிஸார்! 7 பேர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிடியானை பிறப்பிக்கப்பட்ட ஐவரும், சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.