தமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை : கொழும்பின் பல பகுதிகளில் அடைமழை : இலங்கைக்கு ஆபத்தா?

கொழும்பின் பல பகுதிகளில் அதிகாலை முதல் அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது.

பிரதான வீதிகளில் லேசான வெள்ள நிலைமை காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும், 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம்.

மேற்கு, தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் அடைமழை பெய்யும். சப்ரகமுவ, மேற்கு, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அடுத்த வரும் நாட்களில் தமிழகத்தில் அடைமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள அதேவேளை இலங்கையிலும் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்து வருகின்றமையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்து வரும் சில தினங்களில் தமிழகம், இலங்கையின் பல பகுதிகளின் வெள்ளத்தில் மூழ்கும் என அமெரிக்காவை தளமாக கொண்ட வானிலை நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.