யாழ்.கொக்குவிலின் சில பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக அப்பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைளிலும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டு குழு அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் யாழ் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும், மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையிலேயே தற்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.






