வவுனியாவில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்!

வவுனியா விபத்தில் இருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 7மணியளவில் தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இராணுவத்தினரின் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு இரணுவத்தினரின் கனரக வாகனம் ஒன்றில் நிகழ்வினை ஒழுங்கு படுத்துவதற்கு ஏற்றிவரப் பொருட்களின் வாகனம் உணவகப் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது வவுனியாவிலிருந்து பல்சர் ரக  மோட்டார் சைக்கிலுடன் கனரக வாகனம் மோதியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அன்ரணி யோகேஸ்வரன் அனுஸாந்தன் (வயது 25), அனுஸாந்தன் பவித்திரா (வயது 18) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே பிரமண்டு வித்தியாயலத்திற்கு முன்பாக கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிலினை வழிமறித்துள்ளதாகவும் குறித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நிறுத்தாமல் சென்றதாகவும் அப்பகுதில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like