வாயில் பேனை பிடித்து பரீட்சை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவி

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் விசேட தேவையுடைய மாணவியொருவர் வாயில் பேனை பிடித்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மாவனல்ல கொட்டகல பாடசாலையைச் சேர்ந்த தினுஷா பண்டார என்ற மாணவியே இவ்வாறு பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி என்ற அடைவு மட்டத்தை எட்டாத போதிலும் பரீட்சையில் சித்தி எய்தி மொத்தமாக 145 புள்ளிகளை இந்த மாணவி பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த சிறுமி வாயில் பேனை பிடித்து எழுதுவதற்கும், சித்திரம் வரைவதற்கும் அசாத்திய திறமையுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சித்திரப் போட்டிகளில் இந்த மாணவி பரிசில்களை வென்றுள்ளார்.

கொட்டகல பாடசாலையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியயோரில் இந்த சிறுமியே அதிகளவு புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றாக படித்து ஆசிரியையாக வர வேண்டுமென இந்த விசேட தேவையுடைய தினுஷா கனவு காண்கின்றார்.