இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விலையேற்றம் புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக அமுல்படுத்தப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 149 ரூபாவாக இருந்த 1 லீட்டர் ஒக்டைன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1 லீட்டர் ஒக்டைன் 92 ரக பெற்றோலின் விலை 155 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 169 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதேவேளை, சுப்பர் டீசலின் புதிய விலை 141 ரூபாவாகும். இதற்கமைய, 1 லீட்டர் சுப்பர் டீசலின் விலையும் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like