கணவனை நிர்க்கதியாக்கி விட்டு தன்னுயிரைக் காப்பாற்றிக் கொண்ட மனைவி!

விபத்து சம்பவமொன்றில் மனைவி கணவரை நிர்க்கதியாகவிட்டு தன்னுயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டுள்ள சம்பவமென்று இன்று பதிவாகியுள்ளது.

அலுத்கம முதல் காலி வரையில் பயணிக்கும் ரயில் ஒன்றில் கார் ஒன்று மோதுண்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

57 வயதான கிங்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது சாதாரண வார்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரயில் தூரத்தில் வருவதனைக் கண்ட மனைவி காரின் கதவை திறந்து தான் மட்டும் விபத்தில் தப்பித்துக் கொண்டுள்ளார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத கடவையில் தற்காலிக அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண், புகையிரத கடவை கடக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் அதனை பொருட்படுத்தாது இவர்கள் வாகனத்தைச் செலுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், மனைவி அந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றாரா அல்லது காப்பாற்ற முயற்சித்து அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததா என்பது பற்றிய சரியான விபரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, கணவன் மனைவி உறவு புனிதமானதாக போற்றப்பட்டு வரும் நிலையில் தன்னுரை பணயம் வைத்து கணவனை காப்பாற்றிய பல்வேறு சம்பவங்கள் பற்றி கேள்வியுற்றிருக்கின்றோம், எனினும் இங்கு பதிவிடப்படும் சம்பவம் சற்றே வித்தியாசமானது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like