யாழில் திடீர் சோதனை? 200 பொலிஸாருக்கு விசேட அழைப்பு

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிரடி சோதனையை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கை இன்று இரவு முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

சுமார் 200 இற்கும், மேற்பட்ட பொலிஸார் யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து இவ்வாறு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதி பொலிஸ் மாஅதிபரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like