யாழில் வீதியில் திடீரென மயங்கி வீழ்ந்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்…!

யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் திடீரென மயங்கிச் சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மடம் வீதியைச் சேர்ந்த முகமட் உவைஸ் என்ற 49 வயதான நபரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்தவரை அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்

எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறப்புத் தொடர்பான விசாரணைளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like