கனடாவில் காணாமல் திடீரென மாயமான இலங்கைத் தமிழ் பெண்!

கனடா மார்க்கம் பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே காணாமல் போயுள்ளார் என கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர், 140 பவுண்ட் நிறையுடைவர் மற்றும் கறுப்பு நிற தலை முடியை கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர் தொடர்பில் யாரும் அறிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like