பேஸ்புக் ஊடாக இலங்கை பெண்களுக்கு நடக்கும் கொடூரம்! ஆபாச இணையத்தளங்களில் புகைப்படங்கள்

இலங்கையில் பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அழகாக இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை பேஸ்புக் முகப்படமாக பதிவிட்டு, பல இளம் பெண்களை ஏமாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், இளம் யுவதிகளை ஹோட்டல்களுக்கு அழைத்து சென்ற குற்றச்சாட்டில் தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செயய்ப்பட்டவர் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் நுவரெலியாவை சேர்ந்த 26 வயதான இளைஞன் எனவும் அவர் பல பெண்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அழகாக இளைஞனின் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதற்கு தனது தொலைபேசி இலக்கத்தையும் இணைத்துள்ளார். பின்னர் பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுத்து பின்னர் அவர்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது ஆபாச இணையத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

சந்தேக நபர் பின்னர் அந்த பெண்களை சந்திக்க வேண்டும் என கூறி ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளார். அவ்வாறு ஹோட்டல் வர விரும்பாத பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக அச்சுறுத்தி ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

சந்தேக நபருக்கு நிரந்தர தொழில் இல்லாமையினால் கொழும்பிலுள்ள ஆடை கடைகளில் தொழில் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like