இலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞனின் அபார கண்டுபிடிப்பு : பலரும் வியப்பு!!

இலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இளைஞன் ஒருவர் மிகப்பெரிய நடமாடும் கோளரங்கம் ஒன்றை வெற்றிகரமாக அமைத்துள்ளார்.

பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த தரங்க குசும் சிறிகே என்ற இளைஞனே இந்த கோளரங்கத்தை தயாரித்துள்ளார்.

350 பேர் அமர்ந்து இந்த கோளரங்கத்தை பார்வையிடக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய கோளரங்கமாக இந்த கோளரங்கம் காணப்படுகின்றது.

பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த இந்த இளைஞன் தனது சிறு வயது முதல் விண்வெளி தொடர்பான தகவல்கள் தேடுவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.

எனினும் இதற்கு முன்னரே இதனை நிர்மாணிப்பதற்கு அவரது பொருளாதார பின்னணி போதுமானதாக இருக்கவில்லை.

இந்நிலையில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் பிரதான கோளரங்கத்தை பார்வையிட சென்ற இந்த இளைஞனுக்கு நடமாடும் கோளரங்கம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அவரது நண்பர்கள் சிரித்த போதிலும், தான் எப்படியாவது இதனை நிர்மாணித்திட வேண்டும் என தீவிரமாக செயற்பட்டுள்ளார்.

470 இரும்பு துண்டுகளை பயன்படுத்தி நடமாடும் கோளரங்கத்தை இந்த இளைஞன் நிர்மாணித்துள்ளார்.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள கோளரங்கத்தை விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

அதற்கமைய இலங்கையின் பின்தங்கிய கிராமங்களுக்கு இந்த கோளரங்களை கொண்டு சென்று மாணவர்கள் பார்வையிடுவதற்கான வசதிகளை அந்த இளைஞன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இளைஞனின் அபார திறமை குறித்து இலங்கை வாழ் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.