இலங்கையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளைஞன் : வெளிநாட்டில் கோரமாக பலியான சோகம்!!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் Clayton பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த காமில் யுசுப் என்ற 22 வயதான இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளறார்.

மோட்டர் சைக்கிள் பிரியரான காமில் யுசுப், நீண்ட காலத்திற்கு பின்னர் மோட்டர் சைக்கிளில் பயணித்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

காமில் யுசுப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கிய காமில் யுசுப், தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.

கட்டுகுருந்தையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த காமிலின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனையடுத்து பல எதிர்பார்ப்புகளுடன் காமில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார்.

எனினும் வெளிநாட்டு சென்ற காமில் நீண்ட காலத்தின் பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்க ஆசை கொண்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மீது அதிக அன்பு வைத்திருந்த காமில், இலங்கையில் இடம்பெற்ற பல மோட்டார் சைக்கிள் ஓட்ட போட்டிகளில் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like