கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பாக ஆராய வடக்கிலிருந்து 15 பேர் கொண்ட குழு அவுஸ்திலேரியா பயணம்….

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் நேரில் பார்வையிட்டு அதுதொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கில் வடக்கின் அதிகாரிகள் குழு 15 பேர் அவுஸ்ரேலிய நாட்டிற்கு இன்று அதிகாலையில் பயணமாகினர்.

யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசடைவதனையடுத்து உடனடித் தேவைகள் காக கிளிநொச்சி இரணைமடு நீர் மூலம் அதனை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்டு அதற்காக முயன்ற சமயம் கிளிநொச்சி மாவட்டத்தின் 30 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனச் சுட மிக காட்டியதன் காரணமாக குறித்த திட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காக கடல் நீரை குடிநீரா மாற்றி விநியோகிப்பதற்காக திட்டமிடப்பட்டது. அதன் பிரகாரம் அதற்காக வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு மருதங்கேணியில் இருந்து கடல்நீரை குடிநீராக பெறும் நிலை ஏற்பட்டால் அதன் மூலம் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தற்போது அப்பகுதி அமைப்புக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்

இவற்றின் அடிப்படையில் உண்மையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் சந்தர்ப்பத்தில் பாதிப்படையும் என ஒரு தரப்பு ஆராச்சியாளர்கள் பாதிப்பை சுட்டிக்காட்டும் நிலையில் எந்த வகையிலும் வாழ்வாதாரமான மீன்பிடியோ அல்லது மீனவளமோ அழியாது என மற்றுமோர. ஆராச்சி தரப்பு தெரிவிக்கின்றது. மாறாக மீன் வளம்அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் கடல் நீரை நன்னீராக்பும் பல நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலிய நாட்டில் ஓர் மாநிலத்தில் மட்டும் 5.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.்அவர்களின் குடிநீரிற்காக கடல்நீரே பயன் படுத்தும் நிலையில் அதன் தாக்கம் அதன் காரணமாக கடலில் ஏற்படும் மாற்றம் , உயிரினங்களிற்கு உண்டாகும் நன்மை , தீமைகள் என்பவற்றின் அடிப்படையில் உண்மையில் கடல் நீரில் இருந்து நீரை எடுத்து உப்புச் செறிவை பிரிப்பதனால் உயிரினங்களிற்கு ஆபத்தா அல்லது நன்மையா அதிகம் எனவும் இவ்வாறான திட்டத்தினை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதன் சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்வதற்காகவே குறித்த பயணம் இன்று இடம்பெறுகின்றது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலப்பு அதிகார சபையின் ஏற்பாட்டின் இடம்பெறும் இப் பயணத்தின் அடிப்படையில் எதிர்காலத் திட்டமிடலை மேற்கொள்ளும் வகையிலேயே மேற்படி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பயணத்தில் வட மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் , நா.வேதநாயகன் , வட மாகாண நீர் வழங்கல் வடிகாலப்புச் சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட அணியினர் பணிப்பதோடு குறித்த அணியினர் எதிர் வரும் 1ம் திகதி நாடு திரும்புவர் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. –

Get real time updates directly on you device, subscribe now.

You might also like