புலிகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடா? பொன்சேகா போர்க்கொடி

கைகளில் ஆயுதம் ஏந்தி நாட்டுக்கு துரோகம் இழைத்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை என அமைச்சர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நஷ்டஈட்டை அவ்வாறானவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் பெற்றுக் கொடுப்பது தவறு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் பொன்சேகா,

“கடமையில் ஈடுபட்டிருக்கும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

எனினும், அரசியலமைப்புக்கு முரணாக நாட்டை பிரிக்க கைகளில் ஆயுதம் ஏந்தியவர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பது நியாயமில்லை. தேசத் துரோகம் இழைத்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை.

கைகளில் ஆயுதம் ஏந்தி நாட்டுக்கு துரோகம் இழைத்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை.

அரசியலமைப்புக்கு எதிராக நாட்டை பிரிப்பதற்காக பிரிவினைவாதப் போராட்டம் நடத்தியவர்கள் தேசத் துரோகிகள்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நஷ்டஈட்டை அவ்வாறானவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் பெற்றுக் கொடுப்பது தவறு” என அவர் மேலும் கூறியுள்ளார்.