ரணில் வசமிருந்த இருவர், உடனடியாக மஹிந்த வசமானார்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு தான் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது முன்னோர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்குள், தற்போதைய தலைவர், பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க போவதாக அறிவித்துள்ளார்.

நுகேகொடை – விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு சென்று, தனது ஆதரவை ஆனந்த ஆளுத்கமகே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like