பிரதமராகிய மஹிந்த! யாழில் வெடிகொளுத்தி கொண்டாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகியதனை தொடர்ந்து யாழில் மஹிந்த ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

யாழில் உள்ள பிரதான வீதிகள் ஊடாக வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவின் பாரிய பாதகை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வாகன தொடரணியாக சென்ற ஆதவாளர்கள் முக்கிய சந்திகளில் வெடி கொளுத்தி ஆர்ப்பரித்து தமது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் வெடிகளை கொளுத்தி முக்கிய சந்திகளில் ஆதவாளர்கள் ஆர்ப்பரித்ததனால் வீதியில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதுடன் வீதியால் சென்றவர்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like